Published : 01 Oct 2022 11:17 AM
Last Updated : 01 Oct 2022 11:17 AM
சென்னை: இந்தியாவில் இன்று 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. தேசத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.15000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்.
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்ற ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மின்னணு சாதன பொருட்களை வாங்கி இருந்தனர். அதில் மொபைல் போன்கள் தான் வாடிக்கையாளர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்திருக்கும்.
ரூ.15000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி போன்கள்!
சாம்சங் எம்13 5ஜி: 6.5 இன்ச் திரை அளவு கொண்ட டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், 5000mAh திறன் கொண்ட பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் திறன் கொண்ட கேமரா உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. அமேசான் தளத்தில் இந்த போன் ரூ.11,999-க்கு கிடைக்கிறது.
ரெட்மி நோட் 11T 5ஜி: சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் நோட் 11T 5ஜி பட்ஜெட் போன்களுக்கு மற்றுமொரு சிறந்த ஆப்ஷனாக அமைந்துள்ளது. 6.6 இன்ச் திரை அளவு, டைமன்சிட்டி 810 சிப்செட், 5000mAh திறன் கொண்ட பேட்டரி, ஆண்ட்ராய்டு 11, பின்பக்கத்தில் இரண்டு கேமராவும் இடம் பெற்றுள்ளது. சலுகை போன்றவற்றை சேர்த்து இந்த போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
iQoo Z6 5ஜி: 6.58 இன்ச் திரை அளவு, 4/8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12, பின்பக்கத்தில் 3 கேமரா, டைப் சி சார்ஜர், 5000mAh திறன் கொண்ட பேட்டரி போன்றவை இடம் பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.14,999. கேமிங்கிற்கு இந்த போன் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 9ஐ 5ஜி: மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட், 6.6 இன்ச் திரை அளவு கொண்ட ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட், பின்பக்கத்தில் மூன்று கேமரா, 5,000mAh பேட்டரி, 5ஜி பேண்ட் சப்போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. இந்த போனும் சந்தையில் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT