Published : 28 Sep 2022 03:42 PM
Last Updated : 28 Sep 2022 03:42 PM
மும்பை: மொபைல் போன் செயலிகளின் துணை இல்லாமல் வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாக ரயில் பயண தகவல்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தொடங்கி அடுத்த ரயில் நிலையம் எது என்பது வரையில் அனைத்து தகவல்களையும் பயணிகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்பதை பார்ப்போம்.
முன்பெல்லாம் ரயில் பயணம் என்றால் ‘அடுத்த ஸ்டேஷன் எது?’, ‘இந்த ஸ்டேஷன் எப்போது வரும்?’ என்ற கேள்வி பதில் ஃபார்மெட்டில் பயணிகளுக்குள் உரையாடல்கள் இருக்கும். ஸ்மார்ட்போன் வந்த பிறகு அனைத்தும் அதில் கிடைத்து விடுகிறது. இருந்தாலும் அதற்கு ஸ்மார்ட்போனில் பிரத்யேக செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டியது அவசியம். இந்த நிலையில், அந்தத் தகவல்களை ஸ்மார்ட்போன் செயலி இல்லாமல் வெறும் வாட்ஸ்அப் மூலமாக பெறலாம் என்கிறது மும்பையை சேர்ந்த railofy என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம்.
இதற்கென பிரத்யேக வாட்ஸ்அப் சாட்பாட்டை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், தாங்கள் பயணிக்கும் ரயில் எங்கு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ரயில் நிலையம், முந்தைய ரயில் நிலையம் போன்ற தகவல்களை பெறலாம். இதற்கு பயணிகள் தங்களது பத்து இலக்க பிஎன்ஆர் எண்ணை வாட்ஸ்அப் சாட்பாட்டில் உள்ளிட வேண்டி உள்ளது.
இதை பயன்படுத்துவது எப்படி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT