Published : 16 Sep 2022 05:26 PM
Last Updated : 16 Sep 2022 05:26 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது ரியல்மி ஜிடி நியோ 3T ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ரியல்மி ஜிடி நியோ 3 போனின் மேம்பட்ட வெர்ஷனாக இந்த போன் வெளிவந்துள்ளது. ஐரோப்பாவில் இந்த போன் விற்பனையில் உள்ள நிலையில், இந்தியாவில் இப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது நியோ சீரிஸ் வரிசையின் கீழ் இந்த போனை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
போக்கோ உட்பட பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த போன் விற்பனையில் சவால் கொடுக்கும் என தெரிகிறது. மூன்று வண்ணங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அம்சங்கள்:
அறிமுகத்தை முன்னிட்டு இந்த போன் சலுகை விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The #realmeGTNeo3T has:
80W SuperDart Charge
Snapdragon 870 5G
120Hz E4 AMOLED display
Available in
6GB+128GB, ₹29,999
8GB+128GB, ₹31,999
8GB+256GB, ₹33,999
Offers up to ₹7000 on 1st sale at 12 PM, 23rd Sept. on https://t.co/HrgDJTI9vv & @Flipkart#NEOSpeedAwakens pic.twitter.com/qkjtVS80cI— realme (@realmeIndia) September 16, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT