Published : 09 Aug 2022 07:18 PM Last Updated : 09 Aug 2022 07:18 PM
புதிய பிரைவசி அம்சங்களை அறிமுகம் செய்த வாட்ஸ்அப் | முழு விவரம்
கலிபோர்னியா: பயனர்கள் பிரைவசி சார்ந்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப். அந்த அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்சங்கள் பயனர்களின் பிரைவசி சார்ந்த விஷயங்களில் கவனம் வைக்கும் விதமாக வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.
புதிய அம்சங்கள்
பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் போது தங்களது ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த அம்சம் பர்சனல் மற்றும் அஃபிஷியல் என பல்வேறு வகைகளில் பயனர்களுக்கு உதவலாம்.
இந்த மாதத்தின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இது ரோல்-அவுட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருந்து எந்தவித நோட்டிபிகேஷனும் இல்லாமல் வெளியேறலாம் (Exit ) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சில இம்சையான குரூப்களில் இருந்து பயனர்கள் வெளியேற உதவும்.
வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இந்த ஸ்க்ரீன் ஷாட் அம்சம் சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மெசேஜை டெலிட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாம். இதன் மூலம் ஒரே மெசேஜை டெலிட் செய்ய அதிகபட்சம் இரண்டு நாட்கள் வரையில் டைம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disappearing மெசேஜஸ் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற நபர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாத வகையில் தங்களது வாட்ஸ்அப் செயலிக்கு பாஸ்வேர்டு செட் செய்யும் அம்சமும் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.
WRITE A COMMENT
Be the first person to comment