Published : 08 Jul 2022 07:01 PM
Last Updated : 08 Jul 2022 07:01 PM

8-ம் ஆண்டில் சியோமி இந்தியா | 60% ஆஃபரில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் மற்றும் பல

புதுடெல்லி: சியோமி இந்தியா 8-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் மற்றும் பல டிஜிட்டல் டிவைஸ்களின் விலையில் 60 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை சியோமி மற்றும் ரெட்மி பிராண்டுகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது சீன நிறுவனமான சியோமி. பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். படிப்படியாக பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியது. இந்நிலையில், "எட்டாம் ஆண்டு விற்பனை" என சில சாதனங்களுக்கு சலுகை அறிவித்துள்ளது சியோமி.

சலுகையில் கிடைக்கும் டிவைஸ்களின் விவரம்: சியோமி 11i, சியோமி 11i ஹைப்பர் சார்ஜ், சியோமி 12 Pro, ரெட்மி 9A, ரெட்மி 10A மற்றும் ரெட்மி நோட் 11 புரோ+ 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி OLED 55, Mi டிவி QLED டிவி 4K 55 மற்றும் Mi டிவி QLED டிவி 75 போன்ற டிவிகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி புக் 15 ஐ3 மற்றும் Mi நோட்புக் அல்ட்ரா லேப்டாப்பும் சலுகை விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆடியோ சாதனங்கள், ட்ரிம்மர், பவர் பேங்க் போன்றவையும் சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த டிவைஸ்கள் அனைத்திற்கும் அதிகபட்சம் 60 சதவீதம் வரை தள்ளுபடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை இன்று (ஜூலை 8) முதல் வரும் 13-ம் தேதி வரையில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x