Published : 23 Jun 2022 06:14 PM Last Updated : 23 Jun 2022 06:14 PM
இந்திய சந்தையில் அறிமுகமானது சாம்சங் F13 ஸ்மார்ட்போன் | விலை & சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் F13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். போக்கோ, ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனையில் இந்த போன் கடுமையான சவாலை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி.
தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது F13 ஸ்மார்ட்போன்.
F13 சிறப்பு அம்சங்கள்
60hz ரெப்ரேஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன்.
சாம்சங் எக்ஸினோஸ் 850 புரோசஸர் இதில் இடம்பெற்றுள்ளது.
4ஜிபி ரேம். 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு வேரியண்ட் கொண்ட இன்டர்னல் ஸ்டோரேஜில் இந்த போன் வெளிவந்துள்ளது.
6000mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது இந்த போன்.
ஆண்ட்ராய்டு 12-இல் இயங்கும் இந்த போனின் பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ டேட்டா ஸ்விட்ச் அம்சத்தை கொண்டுள்ளது இந்த போன். அதன் மூலம் டூயல் சிம் பயன்பாட்டின் போது பிரதான சிம் கார்டில் டேட்டா இணைப்பு துண்டிக்கப்பட்டால் மற்றொரு சிம் கார்டின் மூலம் தடையில்லாமல் டேட்டாவை பயன்படுத்த முடியும் .
இந்த போனில் உள்ள செயலிகளை பயனர்கள் 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அது தானாகவே ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும். மேலும் 30 நாட்களுக்கு மேல் அது தொடர்ந்தால் குறிப்பிட்ட செயலிகள் டீப் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
64ஜிபி வேரியண்ட் கொண்ட போனின் விலை ரூ.11,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
128ஜிபி வேரியண்ட் கொண்ட போனின் விலை ரூ.12,999 றன தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29-ஆம் தேதி பகல் 12 மணி முதல் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
WRITE A COMMENT