Published : 27 May 2016 12:37 PM
Last Updated : 27 May 2016 12:37 PM
இலக்குகளை அடைய உதவும் ஸ்மார்ட்போன் செயலிகள் பல இருக்கின்றன. ஹாபிட்புல் செயலியும் இந்த ரகத்தைச்சேர்ந்த்து தான். புதிய பழக்கங்களை உருவாக்கிக்கொள்வதில் கவனம் செலுத்துவது மூலம் இலக்குகளை அடைய இந்த செயலி உதவுகிறது. பலவிதங்களில் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.
அடைய வேண்டிய இலக்கு அல்லது ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய பழக்கங்களைக் குறித்து வைத்துக்கொண்டு அவற்றை மறக்காமல் பின்பற்ற இந்தச் செயலி உதவுகிறது.
செய்து முடித்த செயல்களைக் குறித்து வைக்கலாம். செய்ய வேண்டியதை மறக்காமல் இருக்கவும் இதைப் பயன்படுத்தலாம். நாட்காட்டியுடன் இணைக்கப்பட்டு, தேதிவாரியாகச் செயல்களைக் குறித்து வைக்கலாம். மாத இறுதியில் நமது செயல்களை வரைபடமாகப் பார்த்து எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம். ஐபோன், ஆண்ட்ராய்ட் இரண்டிலுமே பயன்படுத்தலாம்.
டவுண்லோடு செய்ய:>http://bit.ly/1CZ5OLG
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT