Published : 07 Apr 2022 07:00 PM
Last Updated : 07 Apr 2022 07:00 PM
108 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனான ‘ரியல்மி 9 - 4ஜி’ போன், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் 9 சீரிஸில் வெளிவரும் கடைசி போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை வணிக ரீதியாக இன்னும் அறிமுகம் செய்யப்படாமல் உள்ளது. அதனால் 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் இந்த போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா தொடங்கி பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த போன். இதனுடன் ஜிடி 2 புரோ ஸ்மார்ட்போன், பட்ஸ் ஏர் 3 மற்றும் புக் பிரைம் போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது ரியல்மி.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராஸசர், 6ஜிபி மற்றும் 8ஜிபி என இருவேறு ஸ்டோரேஜ் வேரியன்ட், 5000mAh பேட்டரி, பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.
4ஜி இணைப்பு வசதி, டைப் ‘சி’ சார்ஜிங் போர்ட் மற்றும் 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. வரும் 12-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையை தொடங்குகிறது இந்த போன்.
6ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போன் 17,999 ரூபாய்க்கும், 8ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போன் 18,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. நிபந்தனைகளுடன் கூடிய அறிமுக சலுகைகளும் இந்த போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT