Published : 27 Nov 2015 11:47 AM
Last Updated : 27 Nov 2015 11:47 AM
நீங்கள் விரும்பிய காட்சிகளை டெஸ்க்டாப்பில் ஸ்கிரீன்சேவராக வைத்துக்கொள்ளலாம். இதற்கென்றே இலவச ஸ்கிரீன்சேவர்களை வழங்கும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. சரி, இதே போலவே நீங்கள் விரும்பும் காட்சியை உங்கள் வீட்டு வரவேற்பறையில் பெரிய அளவிலான சுவரொட்டியாக இடம்பெறச்செய்ய முடியும் தெரியுமா?
‘பிளாக்போஸ்டர்ஸ்' தளம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வீடுகள் மற்றும் அலுவலகச் சூழலில் சுவரில் பெரிய அளவிலான வால்பேப்பர்களை இடம்பெற வைக்க விரும்பினால் சந்தையில் கிடைக்கும் வால்பேப்பர்களிலிருந்து ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் டிஜிட்டல் கேமரா அல்லது ஸ்மார்ட்போனில் நீங்கள் எடுத்த ஒளிப்படத்தையே இப்படி வீட்டுச்சுவரில் பெரிய வால்பேப்பராக அலங்கரிக்கச் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்? இதைத்தான் பிளாக்போஸ்டர் சாத்தியமாக்குகிறது. இந்தத் தளத்தில் நீங்கள் எடுத்த அழகான படத்தைப் பதிவேற்றினால் அந்தப் படத்தைப் பெரிய அளவில் அச்சிட்டுக்கொள்ளகூடிய தோற்றமாக மாற்றித்தருகிறது. அதாவது அதை தனித்தனி கட்டங்களாகப் பிரித்துத் தருகிறது. இந்தத் துண்டுகளை ஒவ்வொன்றாக அச்சிட்டு பின்னர் ஒன்றாக இணைத்துப் பெரிய சித்திரமாக்கி சுவரில் ஒட்டிக்கொள்ளலாம். தேவை ஒளிப்படமும் பிரின்டரும்தான்!.
இணையமுகவரி: >http://www.blockposters.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT