Published : 09 Nov 2015 12:30 PM
Last Updated : 09 Nov 2015 12:30 PM
ஐபாட் / டேப்லட் பயன்படுத்துபவர்களுக்கான மல்டி பர்ப்பஸ் ஸ்டாண்டை வடிவமைத்துள்ளது ஒரு நிறுவனம். படுத்துக் கொண்டே டேப்லட் பார்க்கும்பழக்கம் உள்ளவர்கள் இந்த ஸ்டேண்டில் டேப்லட்டை பொருத்திக் கொள்ளலாம்.
படுத்துக்கொண்டே நெஞ்சின் மீது ஸ்டாண்டை வைத்துக் கொள்ளலாம், மடியில் வைத்து படிக்கவும், சாதாரணமாக டேபிளில் வைத்து படிப்பதற்கு ஏற்பவும் இந்த ஸ்டாண்டை மடக்கிக் கொள்ளலாம். பல வகைகளிலும் இதன் வடிவமைப்பை மாற்றலாம்.
எடையும் 500 கிராமைவிட குறைவு என்பதால் கையாள எளிதாகவும் இருக்கும். கைப்பையில் வைத்தும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.
நீர் படுக்கை
காலியான வாட்டர் பாட்டில்களைக் கொண்டு தண்ணீரில் மிதக்கும் படுக்கையை வடிவமைத்துள்ளனர். அமெரிக்காவில். காலியான வாட்டர் பாட்டில்கள் தினமும் டன் கணக்கில் சேர்கிறது. அவற்றை இந்த வகையில் பயன்படுத்த முடியும் என்கிறது அந்த நிறுவனம். இந்த தண்ணீர் படுக்கைக்கு ஒரே அளவிலான காலி பாட்டில்கள் வேண்டும்.
இரண்டு ஜிப்கள் கொண்ட, பிரத்யேக துணியில் செய்யப்பட்ட படுக்கையில் இந்த பாட்டில்களை அடைத்தால் படுக்கை தயார். அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 50,000 கோடி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நவீன ஸ்பூன்
உணவு சாப்பிட முடியாத அளவுக்கு கை நடுக்கம் கொண்டவர்களுக்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்பூன். ஸ்பூனில் பிடித்து சாப்பிடுவதற்கு பதில் விரலுக்குள் நுழைத்துக் கொள்ள வேண்டும்.
முடி வடிகட்டி
பாத்ரூம் குழாயில் தலைமுடி அடைத்துக் கொண்டால் எடுப்பதற்கு சிரமமாக இருக்கும். அத எளிதாக்குகிறது இந்த வடிகட்டி. இந்த உருளை வடிவ வடிகட்டியை பாத்ரூம் குழாயில் பொருத்துவதும் எளிது.
பேபி ஸ்பூன்
குழந்தைகள் கையாளுவதற்கு ஏற்ப இலகுவான ஸ்பூனை வடிவமைத்துள்ளது ஒரு நிறுவனம். தரமான சிலிகான் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 2016-ல் வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT