Published : 16 Oct 2015 01:01 PM
Last Updated : 16 Oct 2015 01:01 PM
இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்குச் சுங்க இலாகா வரி மற்றும் விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டும் விவரங்களை அளிக்கிறது 'கஸ்டம் டிராவலர் கைடு இந்தியா' செயலி. இந்தச் செயலி எளிமையான கேள்விகள் மூலம், விதிகள் மற்றும் வரிகளை விளக்கிச்சொல்கிறது. எந்த வகையான பொருட்களுக்கு, இங்கு அனுமதி இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் என்றால் இமெயில் மூலம் தொடர்புகொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சுங்க வரிகளைக் கணக்கிடுவதற்கான கால்குலேட்டர் வசதியும் இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் செயலி விரைவில் மற்ற இயங்குதளங்களுக்கும் அறிமுகமாக உள்ளது.
தரவிறக்கம் செய்ய: >http://bit.ly/1Ghj4Sw
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT