Published : 29 Oct 2020 12:52 PM
Last Updated : 29 Oct 2020 12:52 PM
இந்தியா உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் ட்விட்டர் தளத்தை இயக்குவதில் பயனர்கள் நேற்று சிக்கலைச் சந்தித்தனர்.
புதிய ட்வீட்டுகளைக் காட்டாமல், என்னவோ தவறாகிவிட்டது, மீண்டும் முயற்சியுங்கள் என்ற செய்தி பயனர்களுக்கு வந்துகொண்டே இருந்தது. எதனால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து ட்விட்டர் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதையும் ட்விட்டர் இன்னும் வெளிவிடவில்லை. ஆனால், தளத்தின் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது.
புதன்கிழமை இரவு 8 மணியளவில் பல பயனர்கள் ட்விட்டர் பிரச்சினை குறித்துப் பகிர ஆரம்பித்தனர். இதில் பெரும்பாலானவர்கள் டெஸ்க்டாப்பில் ட்விட்டரைப் பயன்படுத்துபவர்கள். அடுத்து ஆண்ட்ராய்ட், ஆப்பிள் மொபைல்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது.
தற்போது இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டு படிப்படியாக பழைய நிலைக்கு ட்விட்டர் திரும்பியுள்ளது.
கடந்த அக்டோபர் 16 அன்று ட்விட்டர் தளப் பயனர்கள் இதேபோன்ற பிரச்சினையைச் சந்தித்தனர். அவர்களால் தளத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது. மேலும், கடந்த ஜூலை மாதம் பிரபலங்கள் பலரின் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டன. இது குறித்து ட்விட்டர் தரப்பு வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT