Published : 18 Sep 2015 12:24 PM
Last Updated : 18 Sep 2015 12:24 PM
‘உங்கள் இ-மெயிலை இங்கே சமர்ப்பிக்கவும்’- இணைய சேவை அல்லது செயலிகளைப் பயன்படுத்த முயலும்போது வரவேற்கும் இந்த வாசகம். இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாமா, வேண்டாமா? தேவையில்லாத குப்பை மெயில்கள் (ஸ்பேம்) இன்பாக்ஸுக்கு வந்துவிடுமோ-என்றெல்லாம் தோன்றும்.
இந்த இணைய எச்சரிக்கை தேவையானதுதான். ஆனால் இதற்குத் தீர்வாகத் தற்காலிக மெயில் சேவைகள் இருக்கின்றன. அதாவது ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறந்துவிடக்கூடிய இ-மெயில் சேவைகள். கொரில்லா மெயில், 10 மினிட் மெயில் என்று பல சேவைகள் இருக்கும் இந்தப் பிரிவில் மெயில்டிராப் புது வரவு.
இணையவாசிகள் தங்களது சொந்த இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் எல்லாம் மெயில்டிராப் முகவரியை மாற்று மெயில் முகவரியாகப் பயன்படுத்தலாம்.
இதில் புதிய முகவரியை உருவாக்கிக் கொள்வது மிகவும் சுலபம். மனதில் தோன்றிய ஒரு பெயரை இதில் சமர்ப்பித்துத் தற்காலிக மெயில் முகவரியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-மெயில் முகவரியை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் தைரியமாக சமர்ப்பிக்கலாம். அதே நேரத்தில் அந்த இணையதளத்தின் அறிவிப்பைப் பார்க்க வேண்டும் என்றால் மெயில்டிராப் தளத்தில் நுழைந்து உங்கள் இ-மெயில் கணக்கை இயக்கிக்கொள்ளலாம். பதிவு செய்வது, பாஸ்வேர்டு உருவாக்குவது என எந்தத் தொல்லையும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய தற்காலிக மெயில் சேவை இது.
இணையதள முகவரி: >http://maildrop.cc/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT