Published : 29 Sep 2015 01:13 PM
Last Updated : 29 Sep 2015 01:13 PM

ஃபேஸ்புக் டிப்ஸ்: தானாக ஓடும் வீடியோவை தடுக்கும் வழி

ஃபேஸ்புக் சமீபத்தில் பயனர்களின் டைம்லைனில் வரும் வீடியோக்களை கிளிக் செய்யாமலேயே ஓடும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் பயனர்கள் ப்ளே செய்யாமல், மவுஸ் அந்த வீடியோவின் மேல் பட்ட உடனேயே, தானாக வீடியோ ஓடத்தொடங்கும்.

எந்தவொரு புது முயற்சியையும் பகுதி பகுதியாக அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக், இந்த முறையையும் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. 'இந்த முறையால் நமக்குத் தெரியாமலேயே டேட்டா வீணாகிறது' என்று ஃபேஸ்புக் பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தடுப்பது எப்படி?

உங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்யவும். அதன் இடது கீழ் ஓரத்தில் இருக்கும், வீடியோஸ் (Videos) பட்டியை கிளிக் செய்யுங்கள். இரண்டு பிரிவுகள் தோன்றும். அதில் இரண்டாவதாக இருக்கும் 'ஆட்டோ ப்ளே வீடியோஸ்' (Auto play Videos) கிளிக் செய்யவும்.

அதில் இருக்கும் மூன்று விருப்பத் தெரிவுகளில் ஆஃப் (off) என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் தேவையற்ற வகையில் வீடியோ ப்ளே ஆகி, இணைய டேட்டா வீணாவதைத் தவிர்க்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x