Published : 09 Jun 2020 10:03 PM
Last Updated : 09 Jun 2020 10:03 PM
ஃபேஸ்புக் என்ற வார்த்தைகள் இருக்கும் முகவரியை வைத்து டொமைன் பெயர்களை (இணையதளத்துக்கான முகவரி) பதிவு செய்ததற்காக இந்திய நிறுவனம் ஒன்றின் மீது ஃபேஸ்புக் வழக்கு பதிவு செய்துள்ளது.
மும்பையில் இயங்கும் காம்ப்சிஸ் டொமைன் சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம், facebook-verify-inc . com, instagramhjack . com, videocall - whatsapp . com உள்ளிட்ட டொமைன் பெயர்களை பதிவு செய்துள்ளன. தங்களது இணையதளத்தின் பெயரை வைத்து மோசடியாக பதிவு செய்யப்பட்ட இந்த டொமைன் பெயர்கள் குறித்து ஃபேஸ்புக் விளக்கம் கேட்டிருந்தது. ஆனால் காம்ப்சிஸ் தரப்பிலிருந்து பதிலேதும் வராததால் வெர்ஜீனியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
"எங்க வணிகச் சின்னத்தை விதிமீறிப் பயன்படுத்தும் செயலிகள், எங்கள் பெயரை மோசடியாகப் பயன்படுத்தும் டொமைன்களின் பெயர்கள் இணையத்தில் இருக்கின்றனவா என்று நாங்கள் தேடுவது வழக்கம் தான். இந்த வழக்கு, இணையத்தில் நடக்கும் பல்வேறு மோசடியிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் எங்கள் தொடர் முயற்சியில் ஒரு பகுதிதான்" என்று ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்யும் நோக்கில் ஒரு பிரபல இணையதளத்தின் பெயரை வைத்து புதிய மோசடி இணையதளங்களை உருவாக்கி பயனர்களை நம்பவைத்து ஏமாற்றி அவர்களின் தகவல்களைத் திருடுவது இணையத்தில் வழக்கமே. www-facebook-login.com, facebook-mails.com போன்ற பெயர்களில் மோசடி செய்யும் நோக்கில் ஒரு பிரபல இணையதளத்தின் பெயரை வைத்து புதிய மோசடி இணையதளங்களை உருவாக்கி பயனர்களை நம்பவைத்து ஏமாற்றி அவர்களின் தகவல்களைத் திருடுவது இணையத்தில் வழக்கமே.
கடந்த மார்ச் மாதம் அரிசோனாவில் இருக்கும் டொமைன் பெயர் பதிவு செய்யும் ஒரு நிறுவனத்தின் மீதும், கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் மீதும் இதே போன்ற குற்றங்களுக்காக ஃபேஸ்புக் வழக்குகள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. டொமைன் பெயர்களைப் பதிவு செய்யும் நிறுவனங்கள் மோசடி நோக்கில் செயல்படவில்லையென்றாலும், அதை அனுமதித்தது குற்றம் என்றும், அப்படியான மோசடி தளங்களை முடக்குவது அந்தப் பெயர்களைப் பதிவு செய்த நிறுவனங்களின் பொறுப்பு என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT