Last Updated : 18 Apr, 2020 05:42 PM

 

Published : 18 Apr 2020 05:42 PM
Last Updated : 18 Apr 2020 05:42 PM

விரைவில் அறிமுகமாகிறது கூகுள் டெபிட் கார்ட்

ஆப்பிள் கிரெடிட் கார்டுகளின் வெற்றியைப் பார்த்த பின் கூகுள் நிறுவனம் டெபிட் கார்ட் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதை வைத்து இணையத்திலும், சில்லறைக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க முடியும்

டெக் க்ரன்ச் என்ற இணையதளத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டெபிட் கார்ட், கூகுள் செயலி ஒன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த செயலியை வைத்து என்ன வாங்குகிறோம், கணக்கில் எவ்வளவு பணம் மிச்சமுள்ளது போன்ற விஷயங்களை நிர்வகிக்கலாம்.

சிட்டி, ஸ்டான்ஃபர்ட் ஃபெடரல் கிரெடிட் யூனியன் உள்ளிட்ட வங்கிகளுடன் கூட்டாக இணைந்து இந்த டெபிட் கார்டை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது. ஆப்பிள் கார்ட் போலவே கடைகளிலும் சைர், இணையத்திலும் சரி பயன்படக்கூடிய வகையில் தான் கூகுள் கார்ட் வடிவமைக்கப்படுகிறது. இந்த கார்டின் மூலம் கூகுள் நிறுவனத்துக்கு புதிய வழியில் வருமானமும், தரவுகளும் கிடைக்கும்.

மக்கள் என்ன வாங்குகின்றனர் என்ற தரவுகளை வைத்து கூகுள் தங்கள் விளம்பரங்களை, அதன் அளவை, யாருக்கு அந்த விளம்பரம் சென்றடைய வேண்டும் என பல வகையில் திட்டமிட முடியும்.

இதே டெபிட் கார்டின் மெய்நிகர் வடிவத்தை (virtual card), பயனர்களின் மொபைல் மூலம், ப்ளூடூத் முறையில் செலுத்தும் கட்டணங்களுக்குப் பயன்படுத்தலாம். மற்ற கார்டுகளைப் போல இணையத்தில் மற்ற விஷயங்களை வாங்கவும் பயன்படுத்தலாம்.

தற்போது ஆப்பிள் கிரெடிட் கார்ட் மூலம் ஒரு வருடத்துக்கு 15 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டி நடந்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த விடுமுறைக் காலத்தில் ஐஃபோன் விற்பனை அதிகமானதற்கும் ஆப்பிள் கார்டே காரணமாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x