Last Updated : 03 Apr, 2020 02:07 PM

 

Published : 03 Apr 2020 02:07 PM
Last Updated : 03 Apr 2020 02:07 PM

ஃபேஸ்புக் மெஸஞ்சர் இனி டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம்

ஃபேஸ்புக் மெஸஞ்சரின் டெக்ஸ்டாப்புக்கான வடிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஸ்டோரிலும், மேக் ஆப் ஸ்டோரிலும் இந்தச் செயலி கிடைக்கும். இதன் மூலம் சாட், வீடியோ கால் என மொபைல் மெஸஞ்சரில் செய்யும் அத்தனை விஷயங்களையும் செய்யலாம். இதில் டார்க் மோட் வசதியும் உள்ளது.

ஃபேஸ்புக் மெஸஞ்சரின் டெஸ்க்டாப் வடிவம் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்தே இதற்கான வேலையை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியிருந்தது. பின்னர் 2017 இல் அலுவலக வேலைக்கான மெஸஞ்சர் ஒன்றை மட்டும் அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு வரை டெஸ்க்டாப் பதிப்புக்கான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், ஒரு நிறுவனத்தின் கீழ் பல்வேறு ஊர்களில், நாடுகளில் வேலை செய்பவர்கள், நண்பர்களுடன் உரையாடல் என வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதி அதிகம் தேவைப்படும் இந்த வேளையில் ஃபேஸ்புக் மெஸஞ்சரின் இந்த டெஸ்க்டாப் வடிவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஜூம் என்ற மற்றொரு செயலியிலும் வீடியோ கான்ஃபரன்சிங் வசதி உள்ளது. ஆனால் சமீபத்தில்தான் இந்தச் செயலியில் பாதுகாப்பின்மை அதிகம் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வந்து இந்தச் செயலி அதிக விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x