Published : 01 Apr 2020 12:41 PM
Last Updated : 01 Apr 2020 12:41 PM

வீட்டுக்குள்ளே வரும் புலி, சிங்கம்: குழந்தைகளைக் குதூகலப்படுத்துவது எப்படி?- கூகுள் அறிமுகம்

கரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சூழலில், மிருகக்காட்சி சாலைகளிலும் வனங்களிலும் இருக்கும் விலங்குகளை உங்களின் வீட்டுக்குள்ளேயே கொண்டு வரலாம்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் தற்போது எண்கள், பட விளையாட்டுகள் ஆகியவை பிரபலமாகி வருகின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் 3டி முறையில், விலங்குகளை உருவாக்கி ஏஆர் (Augmented Reality) முறையில் வீட்டுக்குள்ளேயே விலங்குகள், உயிரினங்களைக் கொண்டு வருகிறது. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

எப்படிக் கொண்டு வருவது?
* கூகுளில் புலி, சிங்கம், குதிரை என விலங்குகளின் பெயரைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து கொள்ளுங்கள்.

* வரும் திரையை கீழ்நோக்கி நகர்த்துங்கள்.

* விக்கி பீடியா பகுதிக்கு அருகில், 3டி திரையில் காட்டு (Show in 3D) என்று இருக்கும். அதைத் தொடுங்கள்.

* கர்ஜிக்கும் சிங்கம், உறுமும் புலி, கனைக்கும் குதிரை, நீந்தும் மீன் என நீங்கள் தேர்ந்தெடுத்த உயிரி அசையும்.

* அதற்குக் கீழே View in ur space என்ற தெரிவைத் தொடுங்கள்.

* போனில் வீட்டின் குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

* அங்கு போனை வைத்து ஃபிக்ஸ் செய்யுங்கள்.

* இனி வீட்டுக்குள்ளேயே அனைத்து மிருகங்களும் வரும். அதைக் கொண்டு போட்டோ எடுத்து விளையாடலாம்.

குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தி மகிழலாம். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பெரும்பாலான அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இது வேலை செய்கிறது. சில போன்களில் மட்டும் View in ur space காண்பிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் 7.0 அல்லது அதற்கு மேல் இருக்கிறதா என்று பரிசோதிக்கவும். இல்லையெனில் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x