Last Updated : 14 Aug, 2015 11:37 AM

 

Published : 14 Aug 2015 11:37 AM
Last Updated : 14 Aug 2015 11:37 AM

பிரவுசர் குறிப்பு 

இணையத்தில் உலாவ நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி, இரண்டு விஷயங்களை உறுதியாகச் சொல்லலாம். ஒன்று பெரும்பாலான நேரங்களில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இணையதளப் பக்கங்களைத் (டேப்கள்) திறந்து வைத்திருக்கலாம். இன்னொன்று பல நேரங்களில் இந்தப் பக்கங்களை அனைத்தையும் அப்படியே சேமித்து வைக்கவும் விரும்பலாம். ஆம் எனில் உங்கள் பிரவுசரிலேயே அதற்கான எளிதான வழி இருக்கிறது.

நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவர் என்றால் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இணையப் பக்கங்கள் அனைத்தையும் சேமிக்க விரும்பினால் , ஏதேனும் ஒரு பக்கத்தில் மவுசில் வலப்பக்கம் கிளிக் செய்தால் வரும் மெனு கட்டங்களில் புக்மார்க் ஆல் டேப்ஸ் என்பதை கிளிக் செய்தால் அனைத்துப் பக்கங்களும் சேமிக்கப்பட்டுவிடும். இதற்கெனத் தனிப்பெயரும் கொடுக்கலாம். குரோம் பிரவுசரிலும் இதே போன்ற வசதி இருக்கிறது.

சேமித்த ஃபேல்டரில் நடுவே கிளிக் செய்தால் சேமித்த பக்கங்கள் அனைத்தும் பிரவுசரில் வரிசையாக எட்டிபார்க்கும். பிரவுசரில் உள்ள, பார்த்துக்கொண்டிருந்த பக்கங்களை மீண்டும் வரவழைக்கும் ரிஸ்டோர் வசதியை விட இது எளிமையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x