Published : 21 Aug 2015 04:09 PM
Last Updated : 21 Aug 2015 04:09 PM
புத்தகப் பிரியர்களுக்கான புதுமையான இணையதளம் இது. படிக்க விரும்பும் புத்தகத்தைப் படித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் எனக் கணித்துச் சொல்வதுதான் இந்தத் தளத்தின் சிறப்பு. அதுவும் எப்படி உங்கள் வாசிப்பு வேகத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தகவல் தருகிறது. எப்படி?
நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்புகிறீர்களே அதன் தலைப்பை இந்தத் தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உடனே அந்தத் தலைப்பிலான புத்தகம் மற்றும் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய விவரங்களைக் காண்பிக்கிறது. புத்தகத்தில் உள்ள மொத்த வார்த்தைகள் தொடர்பான தகவலும் இடம்பெறுகிறது. இந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்கான புத்தகத்தைத் தேர்வு செய்ததும், அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு மாதிரி பக்கம் வருகிறது. அதை நீங்கள் படித்துக்காட்ட வேண்டும். நீங்கள் படிக்கும் வேகத்தைக் கொண்டு முழுப் புத்தகத்தையும் படித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் எனக் கணித்துச் சொல்கிறது.
துல்லியமான கணிப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் சுவாரஸ்யமான சேவை. பயணங்களின்போது கையில் எடுத்துச்செல்ல வேண்டிய புத்தகத்தைத் தீர்மானிக்க இந்தத் தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அதே நேரத்தில் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்வதற்கான வழியாகவும் இதைக் கருதலாம். புத்தகத் தேடுபொறி என்று வர்ணித்துக்கொள்ளும் இந்தத் தளம் ஒரு கோடிக்கு மேற்பட்ட புத்தகங்களின் விவரங்களைக் கொண்டுள்ளது. புத்தகங்களை அமேசான் தளத்தில் வாங்கிக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி: >http://www.howlongtoreadthis.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT