Published : 19 Oct 2019 04:19 PM
Last Updated : 19 Oct 2019 04:19 PM
சான்பிரான்சிஸ்கோ
அமெரிக்காவிலிருந்து இயங்கி வரும் பிரபல எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா முதன்முதலாக வெளிநாட்டில் தனது எலெட்க்ட்ரிக் கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ சீனாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
அதன் முதல் வெளிநாட்டு உற்பத்திப் பிரிவான ஷாங்காயில் 2 பில்லியன் டாலர் செலவில் பிரம்மாணடமான ஒரு தொழிற்சாலையை உருவாக்கி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் டெஸ்லா ஒவ்வொரு வாரமும் அதன் மாடல் 3 வகைகளில் 1,000 கார்களை சீன தொழிற்சாலையில் உருவாக்கும் எனவும், ஒருசில வாரங்களுக்குள் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, முக்கிய தொழில்நுட்ப தளமான டெக் கிரஞ்ச் கூறியுள்ளதாவது:
சீன அரசின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது டெஸ்லா நிறுவனம். அதன் நிறுவனர் எலோன் மஸ்க்கின். சீனாவில் இந்தக் கார் உற்பத்தியை தற்செயலாக தொடங்கினாலும் உலகைப் பொறுத்தவரை இதுவே மிகப்பெரிய கார் சந்தையாகும்.
முன்னதாக ஜூலை மாதத்தில், இந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய காலாண்டு வருவாய் கடிதத்தில், மாடல் 3 எஸ் உற்பத்தி 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஷாங்காய் தொழிற்சாலையில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது.
நவம்பர் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்குவது டெல்ஸாவுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும், இது விற்பனையை தொடர்ந்து அதிகரிப்பதோடு கப்பல் மற்றும் கட்டணங்களுக்கான அதிக விலையையும் தவிர்க்க உதவும்.
இவ்வாறு டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT