Published : 19 Oct 2019 02:57 PM
Last Updated : 19 Oct 2019 02:57 PM

ஆரக்கிள் இணை தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்ட் காலமானார்

மறைந்த ஆரக்கிள் இணை தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்ட் (62).

சான் பிரான்சிஸ்கோ

கடந்த மாதம் வரை மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின் இணை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த மார்க் ஹர்ட் காலமானார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 62.

ஆரக்கிள் கார்ப்பரேஷன் என்பது கலிபோர்னியாவின் ரெட்வுட் ஷோர்ஸை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமாகும். கிளவுட் இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ் மற்றும் நிறுவன மென்பொருள் தயாரிப்புகள், குறிப்பாக தரவுத்தள மேலாண்மை அமைப்புகளின் அதன் சொந்த பிராண்டுகளில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆரக்கிள் விற்பனை செய்து வருகிறது.

உலகம் முழுவதும் கணினிப் பொறியியலில் மென்பொருள் துறையில் சாதனை படைத்த ஆரக்கிள் இணை தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த மார்க் ஹர்ட் தனது உடல்நிலையில் கவனம் செலுத்துவதற்காக கடந்த மாதம் விடுப்பு எடுத்திருந்தார்.

இந்நிலையில் ஹர்ட் இன்று அதிகாலையில் இறந்துவிட்டதாக ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன், நிறுவன ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

"62 வயதாக இருந்த ஹர்ட், கடந்த பத்தாண்டுகளாக தலைமை நிர்வாக அதிகாரியாக ஹெவ்லெட் பேக்கார்ட் உட்பட இரண்டு நிறுவனங்களின் வளத்தைப் புதுப்பிக்க உதவினார். மென்பொருள் துறையில் மேலும் ஒரு நிறுவனமும் அவரது முயற்சியில் உருவாக்கப்பட்டது. ஒரு வலுவான விருப்பமுள்ள தலைவராக தனது பெயரை உருவாக்கினார்.

ஆனால், கம்பெனி சார்ந்து அவர் எடுத்த வேறு சில முடிவுகள் சர்ச்சையைத் தூண்டின, ஒரு நிறுவனத்தின் விசாரணையில் அவரது தவறான நடத்தை கண்டறியப்பட்ட பின்னர் எச் -பி யிலிருந்து வெளியேற்றப்பட்டார், என்று 'தி வால் ஸ்ட்ரீட்' ஜர்னல் செய்தி வெளியிட்டது.

ஹர்ட் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு ஆரக்கிளில் பணியாற்றும் தன் ஊழியர்களுக்கு விடுத்த செய்தியில், ''முதல் காலாண்டை நன்றாக முடிக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்தோம். எனினும் தற்போது பணியிலிருந்து நான் விலக விரும்புகிறேன். எனது உடல்நலத்தில் கவனம் செலுத்துவதற்காக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். எனது வேண்டுகோளின் பேரில், இயக்குனர்கள் வாரியம் எனக்கு மருத்துவ விடுப்பு வழங்கியுள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x