Published : 05 Oct 2019 12:50 PM
Last Updated : 05 Oct 2019 12:50 PM
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்கள், உறவுகள், புதிய அறிமுகங்கள் என நட்பு ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ஃபேஸ்புக், நம்மை மற்றவர்களுடன் இணைத்துக்கொள்ள உதவுகிறது.
எனினும் ஃபேஸ்புக்கில் நாம் பார்த்த, லைக் செய்த பொருட்கள், அந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் டைம்லைனில் தோன்றுகின்றன. இதனால் எரிச்சலும் சோர்வும் ஏற்படுவதாக பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நமது டைம்லைனில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்கும் வழியை ஃபேஸ்புக் நிறுவனமே தெரிவித்துள்ளது.
எப்படித் தடுப்பது?
ஃபேஸ்புக்கில், https://www.facebook.com/ads/preferences?__tn__=-UK-R என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில வணிகம் மற்றும் நிறுவனம், செய்தி மற்றும் பொழுதுபோக்கு, சுற்றுலா மற்றும் இடங்கள், பொழுதுபோக்குகள், மக்கள் எனப் பல்வேறு தலைப்புகள் இருக்கும். அவையனைத்தும் நீங்கள் பார்வையிட்ட, லைக் செய்த பக்கங்களாக அல்லது விளம்பரங்களாக இருக்கும்.
அவற்றில், உங்களுக்குத் தேவையில்லாதது என்று நீங்கள் நினைக்கும் தேர்வுகளை இடது, மேல் மூலையில் இருக்கும் பெருக்கல் குறியைத் தேர்வு செய்து நீக்கிவிடலாம். இதன்மூலம் அவை சார்ந்த விளம்பரங்கள் மீண்டும் உங்களின் டைம்லைனில் வராது.
அதே வேளை நீங்கள் தவறாக ஒரு பக்கத்தை நீக்கிவிட்டீர்கள் எனில், அதில் இருக்கும் More என்னும் தெரிவைத் தேர்வு செய்யவும். அதில் உள்ள Removed interests பக்கத்தைத் தேர்ந்தெடுத்து மீண்டும் அதை இணைத்துக் கொள்ளலாம். இதனால் அந்த விளம்பரம் அல்லது செய்தி மீண்டும் உங்கள் டைம்லைனில் தோன்றும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT