Published : 01 Oct 2019 12:03 PM
Last Updated : 01 Oct 2019 12:03 PM

மடக்கி வைக்கும் வசதி கொண்ட சாம்சங் போன்கள் அறிமுகம்; என்னென்ன சிறப்பம்சங்கள்? #GalaxyFold

சாம்சங் நிறுவனத்தின் மடக்கி வைக்கும் வசதி கொண்ட மொபைல் போன்கள் இந்தியாவில் இன்று (அக்.1) விற்பனைக்கு வருகின்றன. தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 வாரங்கள் முன்பாகவே இவ்வகை போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாகக் கருதப்படும் சாம்ஸங் கேலக்ஸி ஃபோல்ட் (Galaxy Fold) வகை மொபைல் போன்கள், கடந்த பிப்ரவரி மாதமே அறிமுகப்படுத்தப்பட்டன.

கேலக்ஸி ஃபோல்ட் போன்களின் சிறப்பம்சங்கள் என்ன?


மெமரி
ரேம்: 12 ஜிபி
ரோம்: 512 ஜிபி

டிஸ்பிளே: 7.30 இன்ச்

கேமராக்கள்: - 6
முதன்மை கேமரா - 2 (10 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல்)
இரண்டாம் நிலை கேமரா - 1
பின்புறக் கேமரா - 3 (12 மெகாபிக்சல்)

பேட்டரி, சார்ஜர்:
* 4380-MAh (குறைந்தது இரு நாட்கள் வரை தாங்கும்)
* 15 வாட்ஸ் அதிவேக சார்ஜர்
* இரு பக்க வயர்லெஸ் சார்ஜர் போர்டு

செயலி:
குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர்

இந்த வகை போன்கள் பிளாஸ்டிக் ஓஎல்இடி வகை திரையைக் கொண்டவை. இதன் காரணமாக இந்த வகை போன்களை மடக்கிக் கொள்ள முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு வகை போன்களின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. மொபைல் விற்பனை தொடர்பான அறிவிப்பை சாம்சங், தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x