Published : 14 Aug 2019 10:59 AM
Last Updated : 14 Aug 2019 10:59 AM
தனது பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாத்துக் கொள்ள ஃபிங்கர் ப்ரின்ட் லாக் (Finger Print Lock) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப்.
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சுமார் 150 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலியை, இந்தியாவில் 20 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் தனது பயனாளர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ் அப் சில நுட்பங்களை சேர்த்து வருகிறது.
அந்த வரிசையில், பயனாளர்களின்தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாத்துக் கொள்ள சிறப்பம்சமாக கைரேகை மூலம் வாட்ஸ் அப்புக்குள் நுழையும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதமே வெளியான நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2.19.221 பீட்டா வெர்சன் செல்போன்களில் இதனைப் பெற இயலும்.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ் அப்பில் உள்ள செட்டிங்க்ஸ் ஆப்ஷனில் பிரைவஸி என்ற பிரிவுக்குச் சென்றால் அதில் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். அதனை சொடுக்கினால் பயனாளரின் கைரேகையைப் பதிவு செய்யச் சொல்லும். அவ்வாறு பதி செய்தால் வாட்ஸ் அப் லாக் ஆகிவிடும். அதிலும்கூட உடனே லாக் ஆகவேண்டுமா, இல்லை குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஆக வேண்டுமா என்ற ஆப்ஷனும் கூடுதல் சலுகையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வாட்ஸ் அப்பை திறக்க கைரேகையைப் பயன்படுத்தி அன்லாக் செய்ய வேண்டும். இதன் மூலம் பயனாளரின் பிரைவஸி பாதுகாக்கப்படும் என வாட்ஸ் அப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT