Last Updated : 22 Jul, 2019 01:00 PM

 

Published : 22 Jul 2019 01:00 PM
Last Updated : 22 Jul 2019 01:00 PM

இன்று இந்தியச் சந்தையில் வெளியாகிய ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ

Red Me K20, K20 Pro

ரெட்மி நிறுவனம் ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஆகிய மொபைல்களை உலகின் வேகமான ஸ்மார்ட்போன்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு மொபைல்களும் முதலில் சீனாவில் விற்பனைக்கு வந்தன. பிறகு இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோவின் விலை:  

ரெட்மி K20 ப்ரோ 

6 ஜிபி ரேம் +  128 ஜிபி சேமிப்பு அளவு - ரூ. 27,999

8 ஜிபி ரேம் +  256 ஜிபி சேமிப்பு அளவு - ரூ. 30,999

ரெட்மி K20 

6 ஜிபி ரேம் +  64 ஜிபி சேமிப்பு அளவு -  ரூ. 21,999 

6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு அளவு - ரூ. 23,999

ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே:

                 * 6.39 இன்ச் 1080x2340 பிக்சல்கள்

                 * அமொலெட் டிஸ்பிளே (AMOLED Display)- வளைவாக இருக்கும்

                 * திரை முழு உடல் விகிதம் - 91.9 சதவிகிதம்

                 * பாப் அப் கேமரா இருப்பதால் டாட் நாட்ச் டிஸ்பிளே இல்லை.

                 * திரை விகிதம் 19.5:9

                 * இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்கிறது

கேமராக்கள் :

                 * பின்புற கேமராக்கள் - முதன்மை கேமரா 48 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என மூன்று கேமராக்கள் உள்ளன.

                 * முன்புறம் செல்ஃபி கேமரா - 20 மெகாபிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி:

                 * 4000-MAh (இரண்டு நாள் வரை தாங்கும்)

                 * 27 வாட் அதிவேக சார்ஜர்

                 * டைப்-C சார்ஜர் போர்டு

ஹெட்போன் ஜாக்:

                    3.5mm

செயலி:

                    ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர், அல்டினோ 640 ஜிபியு

வண்ணங்கள்:

                    நீலம் , சிவப்பு, மற்றும் கருப்பு (Glacier Blue, Flame Red, Carbon Fiber Black)

ரெட்மி K20 அம்சங்கள்:

ரெட்மி K20 யும் கிட்டத்தட்ட ரெட்மி K20 ப்ரோ அளவுக்குச் சமமானது தான். இதில் ப்ராசஸர் ஸ்னேப்ட்ராகன் 730, 18 வாட் சார்ஜர் மற்றும் இரண்டு வண்ணங்களில் வெளியாக உள்ளது. மற்றபடி ரெட்மி K20, K20 ப்ரோவிற்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் இல்லை.

வண்ணங்கள்:

நீலம், சிவப்பு ( Glacier Blue, Flame Red).

ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்மி K20 மதியம் 12 மணி அளவில் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் வழக்கம் போல்  Flash sale- ல் வெளியிடப்பட்டதால் இந்த மொபைலை அனைவராலும் வாங்க முடியவில்லை.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x