Published : 26 Jun 2015 12:57 PM
Last Updated : 26 Jun 2015 12:57 PM
எல்லோருக்கும் நியூஸ் படிக்கிறதுல ஆர்வம் இருக்கும். ஆனால் முழு நியூஸையும் படிக்கப் பொறுமை இருக்காது. எல்லோரும் அவசர அவசரமா ஓடிட்டிருக்காங்க. அவங்களுக்கு சுருக்கமா நியூஸைக் கொடுத்தால் படிப்பாங்க. என்ன நடந்தது, என்ன நடக்குது போன்ற தகவல்களை ஒரு ஃப்ரண்ட் மாதிரி சொன்னாப் போதும். அப்படியான்னு கேட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க.
ஒருவேளை முழுத் தகவலும் தேவைன்னா போய்ப் படிச்சிக்குவாங்க. ஆனால் இப்படி ஒரு ஃப்ரண்ட் வேணுமே. இந்த ஃப்ரண்டோட வேலையைச் செய்கிறது நியூஸ் இன் ஷார்ட்ஸ் மொபைல் ஆப். வெறும் அறுபது வார்த்தைகளில் நியூஸைச் சொல்லிவிடுவது இதன் சிறப்பம்சம்.
எவ்வளவோ நியூஸ் ஆப் இருந்தாலும் துணிச்சலோடு களம் இறங்குச்சு நியூஸ் இன் ஷார்ட்ஸ். 2013- செப்டம்பர் மாதம் இந்த அப்ளிகேஷன் அறிமுகமாச்சு. இந்த அப்ளிகேஷனை டெல்லி ஐஐடியைச் சேர்ந்த அஸார் இக்பால், தீபித் புர்கயாஸ்தா, அனுனை அருணவ் ஆகிய மூவரும் உருவாக்கினாங்க. முதலில் ஃபேஸ்புக்ல சின்ன சின்னதா நியூஸப் போட்டிருக்காங்க.
அதுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்த்த பின்னர்தான் இதை ஒரு மொபைல் அப்ளிகேஷனா மாத்தியிருக்காங்க. இந்த அப்ளிகேஷனை இதுவரை பத்து லட்சம் பேர் டவுன்லோட் பண்ணியிருக்கிறதா நியூஸ் இன் ஷார்ட்ஸ் சொல்லுது. கூகிள் ப்ளே ஸ்டோரின் டாப் டவுன்லோட் பட்டியலில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடிச்சிருக்கு. கூகிள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணிக்கலாம்.
நியூஸை 13 வகைகளில் பிரிச்சுக் கொடுத்திருக்கங்க. புக் மார்க் வசதியும் இதில் இருக்கிறது. நியூயார்க் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டைகர் குளோபல் நிறுவனம் இந்த மொபைல் அப்ளிகேஷனுக்கு நிதி உதவியளிக்கிறது. இதன் இணைய முகவரி: >http://newsinshorts.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT