Published : 30 May 2015 03:21 PM
Last Updated : 30 May 2015 03:21 PM
ஸ்மார்ட் போனில் உள்ள காமிராவை எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். புதிய அலாரம் செயலி ஒன்று கேமராவைக் கொண்டு அசத்தலான வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.
ஆண்ட்ராய்டு போனுக்கான இந்தச் செயலி (Wave Alarm) மூலம் தினமும் காலையில் கண்விழிக்க அலாரம் செட் செய்யலாம். அதன் பிறகு காலையில் அலாரம் அலறி எழுப்பும்போது அதை நோக்கிக் கை அசைப்பது மூலமே அதை அமைதியாக்கி விடலாம்.
கேமரா மூலம் கையின் சைகையைப் புரிந்துகொண்டு செயல்படுகிறது இந்தச் செயலி. ஆனால் கையசைத்துவிட்டு மறுபடியும் தூங்கிவிட்டால் அதற்குச் செயலி பொறுப்பல்ல: https://play.google.com/store/apps/details?id=com.camalarm.app
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT