Last Updated : 17 Apr, 2015 03:28 PM

 

Published : 17 Apr 2015 03:28 PM
Last Updated : 17 Apr 2015 03:28 PM

தினம் தினம் மூன்று புது போன்கள்!

புதுப்புது ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனவே மொத்தம் எத்தனை போன்கள்தான் புதிதாக வந்திருக்கின்றன? ஒரு நாளைக்கு மட்டும் எத்தனை போன்கள் அறிமுகமாகின்றன? இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் ஓடுகின்ற என்றால் ஸ்மார்ட் போன் சார்ந்த கேள்விகளுக்கு எல்லாம் கேட்ஜெட் ஆய்வு தளமான >91mobiles.com பதிலளிக்கிறது.

2013-ல் மட்டும் 957 போன்கள் அறிமுகமாகி உள்ளன. 2014-ல் இந்தியச் சந்தையில் 64 இந்திய பிராண்ட்கள் உள்ளிட்ட 95 பிராண்ட்கள் மொத்தம் 1,137 புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அதாவது தினமும் 3.1 செல்போன்கள் வெளியாகியுள்ளன.

இது 2013-ஐக் காட்டிலும் 19 சதவீதம் கூடுதலாகும். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 215 போன்கள் வெளியாகியுள்ளன. விழாக்காலம் இனிமேல் தான் வர இருப்பதால் ஆண்டின் பிற்பகுதியில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் கூடும் என்கின்றனர்.

கடந்த ஆண்டு அறிமுகமான போன்களில் 5,000 முதல் 15,000 விலையிலான பட்ஜெட் போன்கள்தான் அதிகமாம். அது மட்டும் அல்ல, ஸ்மார்ட் போன்களின் சராசரி விலையும் 19 சதவீதம் குறைந்திருப்பதாகத் தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x