Published : 26 Feb 2015 04:34 PM
Last Updated : 26 Feb 2015 04:34 PM
உலகின் மிகப் பெரிய சீனாவைச் சேர்ந்த கணினி உற்பத்தி நிறுவனமான லெனோவா இணையதளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.
பல மணி நேரம் இயக்க முடியாமல் இருந்த இணையதளத்தை முடக்கியதாக 'லிஸர்ட் ஸ்குவாட்' பொறுப்பேற்றுள்ளது.
லெனோவா இணையதளத்தின் வழக்கமான முகப்புப் பக்கத்தில் அத்துமீறியுள்ள ஹேக்கர்கள், அதில் இளம் பெண்ணின் படங்களை நுழைத்துள்ளனர். இதனால் பல மணி நேரத்துக்கு அந்த இணையதளத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். பின்னர் சில மணி நேரங்களில் இணையதளம் வழக்கம்போல இயங்க தொடங்கியது.
ஹேக்கிங் செயலுக்கு ட்விட்டர் குறும்பதிவு தளம் வழியாக பொறுப்பேற்ற 'லிஸர்ட் ஸ்குவாட்' என்ற மர்ம ஹேக்கர்கள், "மேலும் நிறைய லிசர்ட் அத்துமீறல் காத்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
அதோடு, ஹேக் செய்யப்பட்ட லெனோவா நிறுவன இணையதளத்தின் முகப்பு பக்க படங்களை நிறுவன ஊழியர்களின் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த ஹேக்கிங் நடவடிக்கை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காத லெனோவா நிறுவனம், "தடங்களுக்கு வருந்துகிறோம்" என்று 9 மொழிகளில் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT