Published : 16 Feb 2015 01:07 PM
Last Updated : 16 Feb 2015 01:07 PM
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எல்லாமே மனிதர்களின் உழைப்பை எளிமைப்படுத்துவதற்குத்தான் என்ற வரிசையில் வந்துள்ளது இந்த கருவி. உடனடி காபி மேக்கர் போலவே உடனடி ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் இது. ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு, முன் தயாரிப்பு வேலைகள் செய்யத் தேவையில்லை. மாவு பிசைந்து வைத்துக் காத்திருக்கத் தேவையில்லை. ரொட்டி தேவைப்படும் போது மாவு, தண்ணீர், எண்ணெய் மூன்றையும் இந்த இயந்திரத்தில் போட்டால் போதும். அடுத்த சில நொடிகளில் சுடச் சுட ரொட்டி வெளியே வந்து விழும். ரொட்டி, சப்பாத்தி, பூரி போன்றவைகளை தயார் செய்து கொள்ளலாம். தடிமனாகவோ மெலிசாகவோ தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ரோபோ சிப்பந்தி
ஜப்பானில் ஒரு ஹோட்டலில் ரோபோவை வேலைக்கே அமர்த்தி விட்டனர். ஜூலை மாதத்திலிருந்து இந்த ரோபோ தனது கடமையை ஆற்ற உள்ளது. அசல் பெண் பணியாளரைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, விருந்தினர்களை வரவேற்பது, அவர்களை சோதனையிடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. ஜப்பான் மொழி தவிர ஆங்கிலம், சீன, கொரிய மொழிகளையும் புரிந்து கொண்டு பதிலளிக்கும். தவிர விருந்தினர்களது உடமைகளை எடுத்துச் செல்வது, காபி தயாரிப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்யும். இதன் மூலம் ஓட்டல் நவீனமயமாகும் என்றும், செலவுகள் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT