Published : 05 Jan 2015 05:13 PM
Last Updated : 05 Jan 2015 05:13 PM

கோ டென்னா: சிக்னல் கிடைக்காத இடங்களில் பயன்படும் கருவி

கோ டென்னா

மொபைல் நெட்வொர்க் கிடைக்கவில்லை என்று இனி கவலைப்பட வேண்டாம். செல்போன் அலைவரிசை கிடைக்காத இடங்களிலும் மெசேஜ் மூலம் தொடர்பு கொள்ள வந்துவிட்டது கோ டென்னா என்கிற சிறிய கருவி.

ஸ்மார்ட் போன் ப்ளூடூத் இணைப்பின் வழியாக இந்த கருவி இயங்கும். காடுகளில் அட்வெஞ்சர் சுற்றுலா செல்பவர்கள், மலை ஏறுபவர்கள் மற்றும் தொலை தொடர்பு இல்லாத இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் தகவல் தொடர்புக்கு இது உதவுகிறது. மிக குறைந்த ரேடியோ அலைவரிசையிலும் இந்த கருவி இயங்குகிறது.

ஒரு போனிலிருந்து அனுப்பும் செய்தியை இந்த கருவி வாங்கி எதிர்முனையில் இருக்கும் இன்னொரு கோ டென்னாவுக்கு அனுப்பும். அதன் மூலம் பெறப்படும் செய்தி தேவையானவர்களுக்கு சென்று சேரும். நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் 2 முதல் 6 கிலோ மீட்டர்கள் வரை இந்த கருவி செயல்படும்.

குறைந்த விலை ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் டேப்லெட் களை தயாரித்து புரட்சிசெய்த டேட்டாவைண்ட் நிறுவனம் அடுத்ததாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 என நிர்ணயம் செய்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போனுடன் ஒரு வருடத்துக்கான நெட்வொர்க் இணைப்பையும் சலுகை விலையில் வழங்கத் திட்டமிட்டுள்ளது டேட்டா வைண்ட்.

பஸ்ஸுக்கு தனி வழி!

அகமதாபாத் நகரத்தின் சாலைப் போக்குவரத்து கிட்டத்தட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக உள்ளது என்று சொல்லலாம். இங்குள்ள சாலைகளில் விரைவுப் பேருந்துக்கு என்று தனியாக ஒரு லைன் உள்ளது.

இந்த லைனில் இந்த BRTS பேருந்து தவிர வேறு வாகனங்கள் செல்வதில்லை. தற்போது இந்த தடத்தில் முழுவதும் ஏசி பஸ்கள் இயக்கபடுகின்றன.

இங்கு பயணிப்பது டெல்லி மெட்ரோவுக்கு இணையாக இருப்பதாகச் சொல்கின்றனர் மக்கள்.

கடல் மீது சூரிய மின்னுற்பத்தி

சூரிய ஆற்றலிலிருந்து மின் உற்பத்தியை பெருக்குவதற்கு உலகின் பல நாடுகளும் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. வீட்டு மொட்டை மாடி முதல் பயன்படுத்தாத தரிசு நிலம்வரை சூரிய ஒளி பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஜப்பானில் கடல் மீது சூரிய மின் பலகைகள் அமைக்க உள்ளனர். 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு இந்த சூரிய மின் பலகைகள் அமைய உள்ளன.

இதன் மூலம் ஆண்டுக்கு 15,635 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யப்படும். சூரியன் இருக்கும் திசைநோக்கி நகரும் விதமாகவும் இந்த பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x