Last Updated : 15 Dec, 2014 06:21 PM

 

Published : 15 Dec 2014 06:21 PM
Last Updated : 15 Dec 2014 06:21 PM

ஸ்மார்ட் போன் கால கவலை

பொழுதுபோக்கு கவலை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? வாய்ப்பில்லைதான். ஏனெனில் இது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பதம். ஸ்மார்ட் போன் பழக்கத்தால் வந்திருக்கும் பாதிப்புகளில் ஒன்றைத் தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதாவது அதிக அளவிலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டால், கேளிக்கை உணர்வு ஏற்படுவதற்குப் பதிலாக, மன அழுத்தம், கவலை, நெருக்கடி உணர்வு ஏற்படலாம் என்று அமெரிக்காவின் கெண்ட் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர் ஜியான் லீ சொல்கிறார்.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் இவர் நடத்திய ஆய்வில், எப்போதும் ஸ்மார்ட் போனில் தொடர்பு கொண்டிருப்பது பொழுதுபோக்குக்கு உதவுவதில்லை எனக் கண்டறிந்தார். ஸ்மார்ட் போன் பயனாளிகள் மூன்று வகையாக இருப்பதாகவும் இவர்களில் மூன்றாவது வகையினரான அதிக அளவில் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான திறன் இல்லாமல் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு ஓய்வு நேரம் மன அழுத்தம் மிக்க அனுபவமாக மாறுகிறது. இதைத் தான் பொழுதுபோக்கு கவலை (லீஷர் டிஸ்டிரஸ்) எனக் குறிப்பிடுகிறார். கம்ப்யூட்டர் இன் ஹுயுமன் பிஹேவியர் இதழில் இந்த ஆய்வு வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x