Published : 21 Nov 2014 03:53 PM
Last Updated : 21 Nov 2014 03:53 PM
குழந்தைகளுக்காக..
விளையாடிய குழந்தைகள் இப்போது ஸ்மார்ட்போனோடு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமான பல அப்ளிகேஷன்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன. இதில் கிட் மேத் எனப்படும் கணிதம் சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனை ஏராளமான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இது தவிர, தரையில் கிறுக்கி விளையாடிய குழந்தைகள், இனி ஸ்மார்ட்போனில் கிறுக்கி விளையாடுவதற்கு ஏதுவாக, கிட்ஸ் டூடுல் கலர் அண்ட் ட்ரா என்னும் அப்ளிகேஷன் வந்துள்ளது. இது தவிர, குழந்தைகள் கதைகளை கொண்ட கிட்ஸ் ஸ்டோரி புக் அப்ளிகேஷன் பெரிய அளவில் டவுன்லோட் ஆகிவருகிறது.
மெசஞ்சருக்கு வரவேற்பு
பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் அப்ளிகேஷனிலிருந்து சாட்டிங் முறையை பிரித்து மெசஞ்சர் என்ற பேரில் புதிதாக ஒரு அப்ளிகேஷனை வெளியிட்டது. ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் பயணர்கள் சாட் செய்ய வேண்டுமென்றால், மெசஞ்சரை தான் பயன்படுத்த வேண்டும். இதனால் மெசஞ்சருக்கு எதிராக குரல்கள் எழுந்தன. ஆனால், பேஸ்புக் நிறுவனம் அவற்றை கண்டுகொள்ளவில்லை. எனவே, வேறு வழியில்லாத ஸ்மார்ட்போன் பேஸ்புக் பிரியர்கள், தற்போது மெசஞ்சர் அப்ளிகேஷனையே பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மாதம் 500 மில்லியன் பேர் மெசஞ்சரை டவுன்லோட் செய்வதாக கூறப்படுகிறது. இதன்பேரில் மெசஞ்சரை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அப்டேட் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
மொசில்லாவின் புது முடிவு
கூகிள் க்ரோமின் வருகைக்கு பின்னர் மொசில்லா ஃபயர்பாக்ஸ் ப்ரவுசர் பெரும் சரிவை சந்தித்தது. மேலும் மொசில்லாவை கணினியில் இன்ஸ்டால் செய்தவர்கள் பலர் அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். இதுமட்டுமன்றி அடிக்கடி ப்ரவுசரை திறந்ததும், அடிக்கடி ப்ளக்-இன் போன்ற கூடுதல் மென்பொருட்களை கேட்டும் தொந்தரவு செய்தது. இதனால் நிறைய இணையவாசிகள் மொசில்லாவை புறக்கணித்துள்ளனர். இதனால் சந்தைகளில் பெரிய அளவு வெற்றிபெறாமல் இருந்த மொசில்லா, இனி தனது பிரவுசரில் சில பகுதிகளில் விளம்பரங்களையும், வேறு சில தேடுபொறிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
விளையாட்டு ரோபோ
ரோபோக்களை தயாரிப்பதில் ஜப்பான்தான் ஜாம்பவான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் அந்நாட்டு விஞ்ஞானிகள். டோக்கியோ பல்கலைக்கழகத்தின் இஷிகவா வடானபே ஆய்வகத்தில் புது ரோபோ ஒன்று தயார் ஆகி வருகிறது. இந்த ரோபோவில் பேஸ்பால் விளையாட்டு குறித்து அ முதல் ஃ வரை புரொகிராம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் மைதானத்தில் மனிதர்களை போலவே ஓடியாடி பேஸ்பால் விளையாடுமாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT