Published : 17 Feb 2017 10:12 AM
Last Updated : 17 Feb 2017 10:12 AM
காலையில் குறித்த நேரத்தில் கண் விழிக்க வழி காட்டும் அலாரம் வகை செயலிகள் விதவிதமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல இரவில் தூக்கம் வராமல் தவிக்கும்போது தூக்கம் வர வைக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன எனத் தெரியுமா? இவற்றில் மிகவும் எளிமையானதாக குவிக்கியோவின் 'ஸ்லீப்' செயலி அமைந்துள்ளது.
ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து கொண்டால் இரவில் தூங்கச் செல்லும் முன் அல்லது தூக்கம் வராமல் தவிக்கும்போது இதை இயக்கி மன அமைதி அளிக்கக்கூடிய ஒலிகளைக் கேட்கலாம். இந்த ஒலிகள் தரக்கூடிய அமைதியான உணர்வு கண்களில் தூக்கத்தை வரச் செய்யும் என்பது எதிர்பார்ப்பு.
மழையின் சலசலப்பு, பறவைகளின் சங்கீதம், நதியின் ஓசை, விமானம் செல்லும் ஒலி எனப் பலவித ஒலி அமைப்புகளிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். எவ்வளவு நேரம் இந்த ஒலிகள் ஒலிக்க வேண்டும் என்பதையும் நாமே தீர்மானித்துக்கொள்ளலாம். தியானம் மற்றும் யோகா ஒலிகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
தூக்கமின்மை ஒரு பிரச்சினையாக இருப்பவர்களுக்கு இது உதவுமா என்று தெரியவில்லை. ஆனால் இரவில் தூங்குவதற்கு முன் கொஞ்சம் அமைதியான சூழல் தேவை என நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு: >https://sleep.by.qukio.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT