Published : 10 Jun 2016 01:35 PM
Last Updated : 10 Jun 2016 01:35 PM
உங்களுக்கு ஸ்மார்ட்போன் விடுமுறை தேவையா? இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன் ஸ்மார்ட்போன் பழக்கத்தால் நம் உடலுக்கும், மூளைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பார்க்கலாமா? இதற்காக ஆசாப் சயின்ஸ் வீடியோ சேனல் ஒரு யூடியூப் வீடியோவை உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பை இந்த வீடியோ விவரிக்கிறது.
ஸ்மார்ட்போனைச் சராசரியாக ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துகிறோம், இந்த நேரங்களில் அதன் திரையைக் குனிந்து பார்ப்பது, கூடுதலாக கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பது போன்றவற்றால் கிட்டப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அமெரிக்காவில் பாதிபேருக்கு இந்தப் பாதிப்பு இருக்கிறது.
ஆசியாவில் இது 80 முதல் 90 சதவீத. அதேபோல, காண்டி கிரஷ் போன்ற விளையாட்டுகளில் உள்ள எதிர்பார்ப்பு மற்றும் பரிசு பெறும் தன்மை ஆகியவற்றுக்கான தூண்டுதல் நிக்கோட்டீன் தாக்கத்துக்கு நிகரானது என்றும் வீடியோ தெரிவிக்கிறது.
மேலும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் தூக்கத்தின் தன்மையும் தகவல்களைப் பெறும் தன்மையும் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள, ஏதேனும் ஒரு நாள் ஸ்மார்ட்போன் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது இந்த வீடியோ. அதாவது, “ஸ்மார்ட்போனைக் கீழே வைத்துவிட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்துங்க ப்ரோ” என்று அர்த்தம்.
வீடியோவைக்காண:>https://youtube/W6CBb3yX9Zs
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT