Published : 18 Jan 2017 10:26 AM
Last Updated : 18 Jan 2017 10:26 AM
கார்களில் ஸ்மார்ட்ஃபோன்களை பாதுகாப்பாக வைக்க, சார்ஜ் செய்ய பல புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய கைப்பேசி பாக தயாரிப்புகளான ZEB-CH60UM மற்றும் ZEB-CH702UM என்ற ஸ்மார்ட்போன்களுக்கான கார் மவுண்டுகளை வெளியிட்டுள்ளது.
காரின் 12V போர்ட்டில் தாங்கிகளின் அடிப்பாகம் நேரடியாக பொருந்திக்கொள்ளும். இது மவுண்டிற்கும் மின்சக்திக்கும் ஒரே போர்ட்டையே உபயோகிக்கிறது, ZEB-CH702UM ஆக இருந்தால் கைப்பேசி பிடியிலேயே கைப்பேசியைப் பொருத்த வேண்டும், இதுவே ZEB-CH60UM இல் சக்திவாய்ந்த காந்தங்கள் இருப்பதால் அவை கைப்பேசியைத் தாங்கிப் பிடிக்கும்.
“வசதியாக காரை ஓட்டுவதற்கான முயற்சியில், கார் மவுண்ட்டின் பாகங்களுக்கான தேவையிருப்பதால், நாங்கள் இந்த இரண்டு தயாரிப்புகளை வெளியிட்டோம். இந்த இரண்டு மிகவும் தரமான தயாரிப்புகளானது நீண்டு உழைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது என ஜீப்ரானிக்ஸ் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி கூறியுள்ளார்.
ZEB-CH60UM விருப்பத்திற்கேற்ற படி பார்க்க வளையத்தக்க கழுத்துப் பகுதியைக் கொண்டு 360 கோண அளவுகளில் இணக்கமான சுழற்சியை தரும். இதன் விறைப்பான காந்தத் தாங்கிப் பிடி கைப்பேசியை உறுதியாக அதன் இடத்தில் வைத்திருக்கிறது. ZEB-CH60UM பல அளவுகளில் உள்ள தொலைப்பேசிகளுடன் வேலை செய்வதோடு பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும் என ஜீப்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இதில் USB சார்ஜிங் போர்ட்டும் உள்ளது. இதன் LED இண்டிகேட்டர், சார்ஜ் செயல்பாட்டில் உள்ளதா இல்லையா என்பதை காட்டும்.
ZEB-CH702UM மாடல், ZEB-CH60UM போன்றே வேலை செய்யும் என்றாலும் காந்தத்தின் உபயோகமில்லாமல் கைப்பேசியை ஒரு உறையில் தாங்கி இருக்கும். காரில் இதன் பிடியைப் பொருத்தியிருக்கும் போது பார்ப்பதற்கு சிறப்பாகவும் தோராயமான அளவில் நல்ல முறையில் செயல்படும் படியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமையான ZEB-CH702UM 2 USB சார்ஜிங் போர்ட்டுகளைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு தயாரிப்புகளுமே 1 ஆண்டு உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. இந்த தயாரிப்புகள் இணையத்திலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முன்னணி விற்பனையகங்களிலும் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT