Published : 16 Jan 2017 11:40 AM
Last Updated : 16 Jan 2017 11:40 AM

பொருள் புதுசு: ஹைப்பர் டிரைவ்

ஆப்பிள் மேக் புக் லேப்டாப்பில் யுஎஸ்பி போர்ட் குறைவாக இருக்கும். அதிக யுஎஸ்பி போர்ட்டை பயன்படுத்தும் விதமாக இந்த ஹைப்பர்டிரைவ் உருவாக்கியுள்ளனர். வெவ்வெறு அளவுகளில் 7 யுஎஸ்பி போர்ட்டுகள் இந்தக் கருவியில் உள்ளன.



லெனோவா ஸ்மார்ட் ஹோம்

அமேசான், லெனோவா நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்ஹோம் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தக் கருவியை குரல் வழி மூலம் கட்டுப்படுத்த முடியும். ஸ்பீக்கர், கீபோர்டு வசதி ஆகியவை உள்ளன.



அழகான விளக்கு

இந்த புதிய விளக்கு பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்லாமல் இதனுடைய சுவிட்ச் வித்தியாசமாக உள்ளது. இந்த விளக்குக்கு இடையில் நூலில் ஒரு வளையம் தொங்கவிடப்பட்டுள்ளது. அதை மற்றொரு வளையத்துடன் இணைத்தால் மட்டுமே விளக்கு எரியும்.



ஸ்மார்ட் பிளக்

சாதாரணமாக நம் வீடுகளில் இரண்டு மூன்று இணைப்புகளுக்காக பிளக்கை பயன்படுத்துவதுண்டு. தற்போது ஸ்மார்ட் பிளக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளக்கை நமது மொபைல் போனுடன் இணைத்துக் கொள்ளமுடியும். நமது போனின் மூலமே பிளக்குக்கான சுவிட்சை செயல்படுத்த முடியும். எலெக்ட்ரிக் குக்கரை இந்த பிளக்கின் மூலமாக இணைத்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் ஆன், ஆஃப் செய்து கொள்ளமுடியும். வை-பை வசதி தேவையில்லை. ஜிஎஸ்எம் நெட்வொர்க் மூலமாகவே இது இயங்கும்.



லீஎகோ லைவ்மேன்

அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் கோபுரோ கேமிராக்கள் மிகப் பிரபலம். இதை தண்ணீரில் கூட பயன்படுத்த முடியும். இந்த கேமிராவை போல் லீஎகோ லைவ்மேன் என்ற கேமிரா வந்துள்ளது. 4கே தரத்தில் வீடியோவை பதிவு செய்ய முடியும். 16 எம்பி சென்சார், 1.8 அங்குல திரை, 140 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் ஆகிய வசதிகளுடன் இந்த கேமிரா வந்துள்ளது. இதன் எடை 67 கிராம். ஜி சென்சார் உள்ளதால் அசைவுகள் மூலமே வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x