Last Updated : 26 Jan, 2017 06:30 PM

 

Published : 26 Jan 2017 06:30 PM
Last Updated : 26 Jan 2017 06:30 PM

வீடியோ புதிது: யூடியூப் ரகசியம்

வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் தளம் மூலம் விருப்பமான வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம் என்பதோடு, நாம் பகிர நினைக்கும் வீடியோக்களையும் எளிதாகப் பகிர்ந்துகொள்ளலாம். வீடியோக்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாகப் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, பகிரும் வீடியோவைக் குறிப்பிட்ட கட்டத்திலிருந்து தொட‌ங்கும் வகையில் தேர்வு செய்து பகிர்வதற்கான வசதியாகும்.

உதாரணத்திற்குக் குறிப்பிட்ட வீடியோவை 4வது நிமிடத்திலிருந்து பார்க்க வேண்டுமெனில் அதற்கேற்பத் தொட‌ங்கும் வகையில் அமைக்கலாம்.

இதற்காக, வீடியோவை ஓடவிட்டு, 4வது நிமிடத்தில் அதை பாஸ் செய்து அந்தக் கட்டத்தில் அதன் முகவரியை காபி செய்துகொள்ள வேண்டும். இந்த முகவரியை நண்பர்களுக்கு அனுப்பி வைத்தால், அவர்கள் அதை கிளிக் செய்யும் போது 4வது நிமிடத்திலிருந்து வீடியோ ஓடத் தொட‌ங்கும். இது தவிர வீடியோ இணைப்பின் முடிவில் ‘#t=1m20s’ என்பதை இணைத்தும் இதுபோல அமைக்கலாம்.

இந்த வசதியை எளிதாகப் பயன்படுத்துவதற்காக 'யூடியூப் டைம்' எனும் இணையதளம் இருக்கிறது. விவரங்களுக்கு: >http://www.youtubetime.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x