Published : 14 Sep 2018 04:16 PM
Last Updated : 14 Sep 2018 04:16 PM
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் உண்மைத்தன்மையைச் சோதிக்கும் புரோகிராமை ஃபேஸ்புக் வெளியிட உள்ளது. இதன்மூலம் தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகள் பரவுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து புகைப்படங்களின் உண்மைத்தன்மையைச் சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதன் அடுத்தகட்டமாக தற்போது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைச் சரிபார்க்கத் தன்னிடமுள்ள உண்மைத் தன்மையைச் சோதிக்கும் நிறுவனங்களுக்கு (27 third-party fact-checkers) அளிக்கும். அத்துடன் ஃபேஸ்புக் நிறுவனமும் உண்மைத் தன்மைக்கான சோதனையில் ஈடுபடும்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட படங்கள் பொய்யானவை ஆகவோ, தவறாக வழிநடத்துபவையாகவோ இருந்தால், ஃபேஸ்புக் அவற்றைத் தனியாகப் பிரித்துவிடும்.
புகைப்படங்கள், வீடியோக்களின் உண்மைத்தன்மையைச் சோதிக்க காட்சி சரிபார்ப்பு நுட்பங்கள் (visual verification techniques) பயன்படுத்தப்படும். குறிப்பாக ரிவர்ஸ் இமேஜ் தேடல் மற்றும் இமேஜ் மெட்டாடேட்டா பகுப்பாய்வு ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் அவற்றின் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT