Published : 05 Jan 2019 06:02 PM
Last Updated : 05 Jan 2019 06:02 PM
இந்திய ரயில்வே, தனது பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக மாற்ற ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. முன்னதாக 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
தற்போது அனைத்துமே இணைய மயமாகி விட்ட சூழலில், ரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
எப்படி இந்த சேவையைப் பெறுவது?
* முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
* வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.
* வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.
* அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், 'நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?' என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது.
இந்த சேவையை ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது.
இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT