Last Updated : 26 Sep, 2014 01:18 PM

 

Published : 26 Sep 2014 01:18 PM
Last Updated : 26 Sep 2014 01:18 PM

ஆண்களே உஷார்!

ஸ்மார்ட் போன்களை மறந்து தொலைத்த அனுபவம் பலருக்கு இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் பெண்களைவிட ஆண்களே ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களை தவறவிடும் வாய்ப்பு இருக்கிறது. அப்படித் தான் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஹாரிஸ் போல் எனும் கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தக் கணிப்பில் பங்கேற்ற ஆண்களில் 46 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றைத் தொலைத்து விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பெண்களில் இது 27 சதவீதம்தான். அது மட்டும் அல்ல இளம் வயதுள்ள ஆண்களில் இந்த எண்ணிக்கை 60 சதவீதம்.

பலரும் ஸ்மார்ட் போனில் நிறுவனத் தகவல்களைப் பயன்படுத்துவதால் போன் இழப்பு என்பது தனிப்பட்ட இழப்பு மட்டும் அல்ல, அது அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களையும் பாதிக்கலாம் . இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று லேப்டாப் போன்றவை தொலைவதால் நிறுவனங்களுக்குச் சராசரியாக 50,000 டாலர் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தது.

ஆக, காசு கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கினால் மட்டும் போதாது அதைப் பாதுகாப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்!.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x