Published : 27 Nov 2018 10:14 AM
Last Updated : 27 Nov 2018 10:14 AM
தனது கேள்வி பதில் சேவையான ‘நெய்பர்லி’ (Neighbourly) செயலியை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்வி பதில் தளமான ‘குவோரா’ போன்ற இந்தச் செயலி, பயனாளிகள் சுற்றுப்புறம் தொடர்பான கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை சக பயனாளிகளிடமிருந்து பெற உதவுகிறது. குழாய் பழுது பார்ப்பவர் சேவை தொடங்கி அருகில் உள்ள சிறந்த ரெஸ்டாரண்ட்வரை எண்ணற்ற கேள்விகளை இந்தச் செயலி மூலம் கேட்டுப் பதில் பெறலாம். தகவல் அறிந்தவர்கள் இதற்கான பதிலை அளிக்கலாம்.
ஜி.பி.எஸ். அடிப்படையில் இந்தச் சேவை செயல்படுகிறது. இந்தச் சேவை ஒவ்வொரு நகரமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் சென்னை உள்பட நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதே போல கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் சேவை வாயிலாக அதில் பட்டியலிடப்பட்டுள்ள உள்ளூர் வர்த்தக நிறுவனங்களைத் தொடர்புகொள்ளும் வசதியை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
விவரங்களுக்கு: https://neighbourly.google.com/about/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT