Published : 22 Nov 2018 12:50 PM
Last Updated : 22 Nov 2018 12:50 PM
ஃபேஸ்புக்கில் தாங்கள் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள, பயனர்களுக்கு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது. இதே வசதி இன்ஸ்டாகிராமிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தொழில்நுட்ப உலகத்தில் தற்போது "time well-spent" என்பது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தொழில்நுட்பங்களுடன் நாம் செலவிடும் உபயோகமான நேரம் பற்றிய கருத்தே இது. இதையொட்டியே இந்த புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்கிறது.
ஃபேஸ்புக் டாஷ்போர்டில் இருக்கும் இது ஹாம்பர்கர் மெனுவுக்குக் கீழ் (3 கோடுகள் இருக்கும் மெனு) கொடுக்கப்படும். இன்ஸ்டாகிராமில் செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும்.
கடந்த 7 நாட்களில் பயனர்கள் எவ்வளவு நேரம் செலவிட்டுள்ளார்கள் என்பதை இது காட்டும். மேலும் நீங்கள் எவ்வளவு நேரம் இதில் செலவிட விரும்புகிறிர்கள் என்பதையும் செட் செய்து கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்ட வரம்பு வந்தவுடன் உங்களுக்கு அது நினைவூட்டப்படும். தற்காலிகமாக புஷ் நோட்டிஃபிகேஷன்களை முடக்கவும் இந்தப் புதிய அம்சம் வசதி செய்துள்ளது.
சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் ஃபேஸ்புக் மோகம் இளைஞர்களிடையே தீவிரமாகியுள்ளது பல நாட்களாகவே விவாதத்துக்குரியதாகியுள்ளது. தற்போது இந்தப் புது வசதி, பயனர்கள் சமூக ஊடகத்தில் செலவிடும் நேரத்தைக் கட்டுக்குள் வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT