Last Updated : 22 Nov, 2018 12:48 PM

 

Published : 22 Nov 2018 12:48 PM
Last Updated : 22 Nov 2018 12:48 PM

எளிதில் உடையும் ஆப்பிளின் புதிய மெல்லிய ஐபேட் ப்ரோ

மெல்லிய ஐபேட் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ, மெலிதாக இருந்தாலும் மிக எளிதில் உடையக்கூடிய தன்மை இருப்பது தெரியவந்துள்ளது.

பார்க்க கவர்ச்சியாக இருக்கும் கருவியை உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம், அதன் வலிமையைக் கவனிக்காமல் விட்டுவிட்டது ஏன் என்பது புரியவில்லை. பிரபல யூடியூப் பதிவர் ஜெர்ரி ரிக் எவ்ரிதிங் என்பவர், புதிய ஐபேட் ப்ரோ எவ்வளவு எளிதில் உடைகிறது, சிராய்ப்புகள் ஏற்படுகிறது என்பதை அலசி ஆராய்ந்துள்ளார். அவர் வளைத்த முதல் முறையே ஐபேட் ப்ரோ உடைந்து போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

எனவே, நீங்கள் ஐபேட் ப்ரோ வாங்கும் எண்ணம் கொண்டவர் என்றால் அதை மிக மிக ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும் மறக்காதீர்கள். நீங்கள் அதைக் கவனிக்காமல் வைத்து விட்டுப் போகும்போது யாராவது தெரியாமல் அதன் மேல் உட்கார்ந்தால் அவ்வளவு தான். ஐபேட் ப்ரோ இரண்டு பாகங்களாக உங்களுக்குக் கிடைக்கும். 

ஐபோன் எக்ஸ்ஆர் விலையிலேயே கிடைக்கும். ஐபேட் ப்ரோ 11 இன்ச் அகல திரை கொண்டது. 12.9 இன்ச் அகல திரை இருக்கும் பாடல்களில் லிகிவிட் ரெடினா டிஸ்ப்ளேவும், மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் பென்சிலும், டைப் சி USB தேர்வும், 10 மணிநேரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கும் பேட்டரியும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x