Last Updated : 26 Oct, 2018 10:43 AM

 

Published : 26 Oct 2018 10:43 AM
Last Updated : 26 Oct 2018 10:43 AM

தகவல் புதிது: பாஸ்வேர்டுக்கும் ஒரு சட்டம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொண்டு வரப்பட உள்ள புதிய சட்டம் ஊகிக்கக்கூடிய பாஸ்வேர்டுக்குத் தடை போடுவதாக அமைந்துள்ளது. தகவல் தனியுரிமைச் சட்டப்படி உற்பத்தி நிறுவனங்கள் இனி, தங்கள் சாதனங்களில் பலவீனமான பாஸ்வேர்டுகளை அமைக்கக் கூடாது. அதாவது, ஹேக்கர்கள் எளிதில் ஊகித்துவிடக்கூடிய பலவீனமான பாஸ்வேர்டு களை அமைக்காமல், வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க வேண்டும்.

‘ரவுட்டர்’ போன்ற சாதனங்களில் டீஃபால்ட்டாக பாஸ்வேர்டுகள் அமைக்கப்படுகின்றன. பொதுவாக, நிறுவனங்கள் அட்மின் அல்லது பாஸ்வேர்டு போன்ற வார்த்தைகளை பாஸ்வேர்டாக அமைத்துத் தருகின்றன. பயனாளிகள் சாதனத்தை வாங்கியதும் இத்தகைய நன்கறியப்பட்ட படு பலவீனமான பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டு, புதிய பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் பெரும்பாலும், பயனாளிகள் இவ்வாறு செய்யாமல் பழைய பாஸ்வேர்டையே தொடர்கின்றனர். விளைவு, ஹேக்கர்கள் எளிதாக இந்தச் சாதனங்களில் ஊடுருவி விடுகின்றனர்.

இந்தப் பாதிப்பைத் தடுக்கத்தான், கலிபோர்னியா வில் இனி இணைய சாதனங்களில் வலுவான பாஸ்வேர்டு கட்டாயம் அல்லது பயனாளிகள் வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான வழிமுறை அவசியம் எனச் சட்டம் கொண்டுவந்துள்ளனர்.

இன்னொரு பாஸ்வேர்டு தகவலும் உள்ளது. வலுவான பாஸ்வேர்டை உருவாக்கிப் பயன்படுத்தும்போது மோசடி நடப்பதற்கான வாய்ப்பு குறைவதாக, இண்டியானா பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x