Published : 18 Aug 2018 11:08 AM
Last Updated : 18 Aug 2018 11:08 AM

கேரள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறிய உதவும் கூகுள் அப்ளிகேஷன்

கேரள வெள்ளத்தின் காரணமாக தொடர்பு எல்லையிலிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் அல்லது காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக கூகுள் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுப்படுத்தியுள்ளது.

கடவுளின் தேசமாக அறியப்படும் கேரளா, இன்று மிகப்பெரிய பேரிடரைச் சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில் வெள்ளத்தில் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு  உதவ பல்வேறு தரப்புலிருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன.

அந்த வகையில் கூகுள் கேரள வெள்ளத்தின் காரணமாக தொலைத்தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் காணமல் போனவர்களைக் கண்டறிவதற்காக கூகுள் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்களது கம்யூட்டர், கைப்பேசிகளில் பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை:

கூகுள் தேடுதல் பக்கத்தில் (Google search) http://g.co/pf  என பதிவிட்டு, வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான இடங்களைக் குறிப்பிட்டு உங்களுக்குத் தேவையான தகவலைப் பெறலாம்.

வெள்ளத்தில் காணமல்போனவர்களைப் பற்றி தகவல் தெரிந்துகொள்ள விரும்பினால் அவரது பெயர் மற்றும் அவரது இருப்பிடத்தைக் குறிப்பிட்டு அவரது பாதுகாப்பு தொடர்பான தகவலைப் பெறலாம்.

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x