Published : 16 Aug 2018 06:54 PM
Last Updated : 16 Aug 2018 06:54 PM
பல இணையதளங்களில் அருமையான அனிமேஷன் சித்திரங்களைப் பார்த்திருப் பீர்கள். தகவல்களைச் சுவாரசியமான முறையில் அளிக்கவும் தொழில்நுட்ப அம்சங்களை எளிதாக விளக்கவும் அனிமேஷன் சித்திரங்கள் பயன்படுகின்றன. யூடியூப் வீடியோக்களில்கூட அனிமேஷன் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.
இப்படி நீங்களும் அனிமேஷன் சித்திரங்களைப் பயன்படுத்த விரும்பினால் ‘அனிமேட்ரான்’ இணையதளம் உதவுகிறது. இந்தத் தளத்தில் வீடியோ, ஒளிப்படங்களைச் சமர்ப்பித்து அனிமேஷன்களை உருவாக்கலாம். இதற்காகப் பலவகையான டெம்பிளேட்கள் இருக்கின்றன. கட்டணச் சேவை என்றாலும், அடிப்படை சேவை இலவசம். அனிமேஷன் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளவும் இந்தத் தளம் உதவுகிறது.
இணையதள முகவரி: https://www.animatron.com/studio
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT