Published : 20 Jul 2018 12:17 PM
Last Updated : 20 Jul 2018 12:17 PM
இணையத்தில் வரைபடம் என்றதும் கூகுள் வரைபடம்தான் நினைவுக்கு வரும். கூகுள் வரைபடம் தவிர மேலும் பல வரைபட சேவைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சைஜிக் டிராவல் மேப்ஸ். பயணிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள், முக்கிய இடங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றைக் கச்சிதமாக அடையாளம் காட்டுகிறது. இந்தத் தளத்தின் மூலம் கூடுதலான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். தேவையெனில் இதன் மூலமே பயணங்களைத் திட்டமிடலாம். தேடல் வசதியும் இருக்கிறது. பயனாளிகளின் இருப்பிடத்தை உணர்ந்து தளத்தில் நுழைந்ததுமே அவர்களுடைய வசிப்பிடப் பகுதி வரைபடத்தில் முன்னிறுத்தப்படுவது சிறப்பு. ‘ஓபன் ஸ்டிரீட் மேப்’ சேவையைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. இணைய முகவரி: https://travel.sygic.com/en
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT