Published : 01 Apr 2025 12:20 PM
Last Updated : 01 Apr 2025 12:20 PM
புதுடெல்லி: ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி அரசியல் பிரபலங்கள் படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
உலகம் முழுவதும் கிப்லியை பயன்படுத்தத் தொடங்கியதால் பயனர் செயல்பாடு அதிகரித்துள்ளது. இந்த மோகம் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த அம்சம், இலவசமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். ஸ்டுடியோ கிப்லி மார்ச் 26 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து, பிரபலங்கள், அரசியல்வாதிகள் கூட தங்கள் ஸ்டுடியோ கிப்லி பாணி படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேலும் ஐந்து நாட்களில் ஒரு மில்லியன் பயனர்கள் இதை பயன்படுத்தியதாகவும், கடைசி ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பயனர்கள் பயன்படுத்தியதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்த நிலையில், இது போன்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை தற்போது அனைவருக்கும் இலவசமாக சாட் ஜிபிடி வழங்கும். இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment